முத்தமிழ் மன்றம் மாணவர்களின் தமிழ் பேசும் திறனை வளர்க்கவும், மேம்படுத்தவும் தமிழ் ஆர்வம் கொண்டவர்களின் ஒன்றுகூடல் ஆகும். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், தமிழ் இலக்கிய ரசனையை வளர்க்கவும் ஊக்குவிக்கிறது. தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும், பல்வேறு நபர்களுக்கிடையேயான செயல்பாடுகள் மற்றும் போட்டிகளை எதிர்கொள்ளும் திறமைகளை வளர்ப்பதற்கும் பல்வேறு வகையான செயல்பாடுகளை இம்மன்றம் நடத்துகிறது. மாணவர்களின் தமிழ் மொழியின் திறனை மேம்படுத்தும் வகையில் ஆய்வு, விவாதம், கட்டுரை எழுதுதல், படைப்பு எழுதுதல், கவிதை எழுதுதல், குறும்படங்கள், வினாடி வினா, சொற்பொழிவு போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழின் பாரம்பரியமும் தமிழரின் கலாச்சாரமும் மேலும் அறிவு சார்ந்த எண்ணங்களை மாணவர்களிடையே புதுப்பிக்கவும் ஊக்குவிக்கவும் தமிழ் மன்றம் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.
“தமிழ் இனி மெல்லச் சாகும்”, என்ற நிலை மாறி, “தமிழ் இனி வெல்லப் போகும்”, என்ற நிலையை உருவாக்குவதற்கான ஒரு சிறு முயற்சி தான், இந்த “முத்தமிழ் மன்றம்”. தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தன் தாய்மொழியின் வேரறிய, நம் முன்னோர் வாழ்ந்த அடையாளங்களைத் தேடிச் செல்லும் ஓர் அற்புதப் பயணம். தமிழின் பாரம்பரியமும் தமிழரின் கலாச்சாரமும் மேலும் அறிவு சார்ந்த எண்ணங்களை மாணவர்களிடையே புதுப்பிக்கவும் ஊக்குவிக்கவும் தமிழ் மன்றம் வாய்ப்பை ஏற்படுத்தித்தருகிறது.
“தமிழனாய் இருப்போம்!
தமிழ்ப்பற்றை வளர்ப்போம்!”